செய்திகள்

காஞ்சீபுரத்தில் தியாகி கிருஷ்ணசாமி உருவ படத்தை குமரி அனந்தன் திறந்து வைத்தார்

Published On 2016-06-24 14:14 IST   |   Update On 2016-06-24 14:14:00 IST
காஞ்சீபுரத்தில் சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமியின் 91-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்தை குமரி அனந்தன் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமியின் 91-வது நினைவு தினம் மற்றும் அவரது உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கலந்து கொண்டு தியாகி கிருஷ்ணசாமியின் உருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதை தொடர்ந்து கிருஷ்ணசாமி உருவபடத்தை குமரி அனந்தன் கையில் ஏந்தியபடி காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகே நடைபெற்ற விழா மேடையில் இருந்து காஞ்சிபுரம் நகராட்சி வரை ஊர்வலமாக எடுத்து வந்தார். பின்னர் அதனை நகராட்சியில் வைக்க நகராட்சி மேலாளர் நாராயணனிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்எல்என்எஸ். விஜயகுமார், மூத்த காங்கிரஸ் தலைவர் பன்னீர் செல்வம், காங்கிரஸ் தெற்கு மாவட்ட செயலாளர் அன்பு, கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் முத்துக்குமார், நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News