செய்திகள்

அ.தி.மு.க. தேர்தல் பிரசார பாடல் குறுந்தகடு: விருத்தாசலம் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா வெளியிட்டார்

Published On 2016-04-12 07:46 IST   |   Update On 2016-04-12 07:46:00 IST
அ.தி.மு.க. தேர்தல் பிரசார பாடல் குறுந்தகடு: விருத்தாசலம் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா வெளியிட்டார்.
விருத்தாசலம்:

அ.தி.மு.க. தேர்தல் பிரசார பாடல் குறுந்தகட்டினை விருத்தாசலம் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசி முடித்ததும், அ.தி.மு.க. சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசாரப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை அவர் வெளியிட, அதனை அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான மு.தம்பிதுரை பெற்றுக் கொண்டார்.

நிறைவாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாரத முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும், காட்டுமன்னார்கோவில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.ஆர்.ராஜேந்திரன் நேரில் சந்தித்து, தன்னை அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

Similar News