செய்திகள்

தேவகோட்டையில் கோவில் அர்ச்சகர் வீட்டில் 29 பவுன் நகை கொள்ளை

Published On 2016-04-04 10:14 IST   |   Update On 2016-04-04 10:15:00 IST
கோவில் அர்ச்சகர் வீட்டின் கதவை உடைத்து மர்ம மனிதர் கள் 29 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காமாட்சி அம்மன் நகரைச் சேர்ந்தவர் சீனீவாசன், கோவில் அர்ச்ச கர். இவரது மனைவி உஷா.

தனது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் திரு வேந்திபுரத்தில் நடை பெற்ற கோவில் கும்பாபிஷேகத் தில் பங்கேற்பதற்காக, உஷா குடும்பத்தினருடன் சென்று விட்டார்.

இந்த நிலையில் அவர் களது வீட்டு வேலைக்காரப் பெண் சந்திரா, வாசல் தெளிப்பதற்காக சென்றுள் ளார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சீனீவாசனுக்கு தக வல் கொடுத்தார்.

இதுகுறித்து தேவ கோட்டை நகர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீ சார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் முன் பக்க மரக்கதவு கடப் பாரையால் உடைத்து திறக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் வீட்டின் பீரோவில் இருந்த துணிகள் வீடு முழுவதும் சிதறி கிடந் தன.

இதற்கிடையில் சீனீ வாசன் அவரது மனைவி உஷா ஆகியோர் வீடு திரும் பினர். அவர்கள் திருட்டு பயம் காரணமாக 29 பவுன் நகைகளை துணி யில் சுற்றி பீரோவில் மறைத்து வைத்திருந்ததாக கூறினர். ஆனால் அதனை காண வில்லை.

எனவே வீடு புகுந்த கொள்ளையர்கள் 29 பவுன் நகையை கொள்ளையடித் துச் சென்றிருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் யார்? அவர்களுக்கு யாராவது உதவி செய்தார்களா? வீட்டில் துணியில் நகை சுற்றி வைத்திருந்தும் அதனை எடுத்துச் சென்றது எப்படி? இதுபற்றி யாராவது தகவல் கொடுத்தார்களா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

Similar News