தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்.

ராஜபாளையம் அருகே 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2022-08-25 08:10 GMT   |   Update On 2022-08-25 08:10 GMT
  • வீட்டில் குட்கா, புகையிலையை பதுக்கி வைத்து ராஜபாளையம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.
  • மாரிமுத்துவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் வடக்கு மலையடிபட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்வதாக ராஜபாளையம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி உத்தரவின் பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முனிசிபல் காலனியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பவர் தனது வீட்டில் குட்கா, புகையிலையை பதுக்கி வைத்து ராஜபாளையம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாரிமுத்துவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News