தமிழ்நாடு செய்திகள்

12-ம் வகுப்பு தேர்ச்சியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

Published On 2022-06-20 11:50 IST   |   Update On 2022-06-20 11:50:00 IST
  • விருதுநகர் மாவட்டம் 97.27 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று 2-வது இடத்தை பிடித்தனர்.
  • மதுரை மாவட்டத்தில் 96.89 சதவீத மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

பெரம்பலூர்:

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. மொத்தம் தேர்ச்சி சதவீதம் 93.76 சதவீதமாகும்.

பெரம்பலூர் மாவட்டம் 12-ம் வகுப்பு தேர்வில் முதல் இடத்தை பிடித்தது. அந்த மாவட்டத்தில் 97.95 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 97.53 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி 98.39 ஆகவும் அந்த மாவட்டத்தில் இருந்தது.

அதற்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டம் 97.27 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று 2-வது இடத்தை பிடித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்தது. அந்த மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 97.02 ஆக இருந்தது. அதற்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டத்தில் 96.91 சதவீத மாணவ-மாணவிகளும், மதுரை மாவட்டத்தில் 96.89 சதவீத மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்தது. அந்த மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் 86.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

Tags:    

Similar News