டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் சபலென்கா வெற்றி

Published On 2025-06-30 19:15 IST   |   Update On 2025-06-30 19:15:00 IST
  • நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்டன் டென்னில் புல்தரையில் நடக்கக்கூடிய ஒரு போட்டியாகும்.
  • வீரர், வீராங்கனைகள் வெள்ளைநிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இந்த போட்டியின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கியது. நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்டன் டென்னில் புல்தரையில் நடக்கக்கூடிய ஒரு போட்டியாகும். அத்துடன் வீரர், வீராங்கனைகள் வெள்ளைநிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இந்த போட்டியின் மற்றொரு சிறப்பம்சமாகும். இதையொட்டி கடந்த சில தினங்களாக வீரர், வீராங்கனைகள் அங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) மற்றும் கார்சன் பிரான்ஸ்டைன் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-1, 7-5 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News