டென்னிஸ்
null

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சின்னர், கோகோ காப் 2-வது சுற்றுக்கு தகுதி

Published On 2025-08-27 10:38 IST   |   Update On 2025-08-27 11:19:00 IST
  • சின்னர் 6-1, 6-1 ,6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
  • கோகோ காப் (அமெரிக்கா) 6-4, 6-7 (2-7) 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனையை தோற்கடித்தார்.

நியூயார்க்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி) தொடக்க சுற்றில் செக் குடியரசுவை சேர்ந்த கோபிரிவாவை எதிர் கொண்டார். இதில் சின்னர் 6-1, 6-1 ,6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 38 நிமிட நேரமே தேவைப்பட்டது.

10-வது வரிசையில் உள்ள லாரென்சோ முசெட்டி (இத்தாலி) 6-7 (3-7), 6-3,6-4,6-4 என்ற செட் கணக்கில் பெரிகார்டை (பிரான்ஸ்) தோற்கடித்தார். 8-ம் நிலை வீரரான அலெக்ஸ் டி மினாவூர் (ஆஸ்திரேலியா), 14-வது வரிசையில் இருக்கும் டோமி பவுல் (அமெரிக்கா) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது வரிசையில் இருக்கும் கோகோ காப் (அமெரிக்கா) 6-4, 6-7 (2-7) 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை டாம்லஜனோவிக்கை தோற்கடித்தார்.

மற்ற ஆட்டங்களில் 8-வது வரிசையில் உள்ள அமண்டா அனிஸ்மோவா (அமெரிக்கா ), நவோமி ஒசாகா (ஜப்பான்), லிண்டா நோ சக்வா (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

Tags:    

Similar News