டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் கிரீஸ் வீரர் அதிர்ச்சி தோல்வி

Published On 2025-05-29 01:16 IST   |   Update On 2025-05-29 01:16:00 IST
  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
  • இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

பாரிஸ்:

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரும், கிரீசை சேர்ந்தவருமான சிட்சிபாஸ், இத்தாலியின் மேட்டியோ கிகாண்டே உடன் மோதினார்.

முதல் செட்டை 6-4 என கிகாண்டே வென்றார். இரண்டாவது செட்டை சிட்சிபாஸ் 7-5 என வென்றார். இதனால் சுதாரித்த இத்தாலி வீரர் மேட்டியோ அடுத்த இரு செட்களை 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News