டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன்: முதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- முதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் மிட்செல் க்ரூகர் உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சுமித் நாகல் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த தகுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை அடுத்த தகுதிச்சுற்றில் சுமித் நாகல், ஆஸ்திரியாவின் ஜூரிஜ் ரோடியோனோவுடன் மோதுகிறார்.