டென்னிஸ்

ஹாலே ஓபன் டென்னிஸ்: சின்னர், ரூப்லெவ் முதல் சுற்றில் வெற்றி

Published On 2025-06-18 15:05 IST   |   Update On 2025-06-18 15:05:00 IST
  • ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
  • முதல் சுற்றில் நம்பர் 1 வீரரான சின்னர் வெற்றி பெற்றார்.

பெர்லின்:

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் யானிக் ஹன்மான் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆப்னரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News