டென்னிசில் மட்டுமல்ல, நடனத்திலும் கிங் போல..! வைரலாகும் ஜோகோவிச்சின் டான்ஸ் வீடியோ
- அமெரிக்க வீரர் ஃப்ரிட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- மகள் பிறந்தநாளை முன்னிட்டு அசத்தல் ஆட்டம் போட்டார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2ஆவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.
முதல் இரண்டு செட்களை இழந்த ஃப்ரிட்ஸ் 3ஆவது செட்டில் அபாரமாக விளையாடினார். இதனால் அந்த செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். என்றபோதிலும் 4ஆவது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ்க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4 என ஜோகோவிச் 4ஆவது செட்டை கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைறுதிக்கு முன்னேறினார்.
ஜோகோவிச் விளையாடிய போட்டி இந்திய நேரப்படி இன்று காலை முடிவடைந்தது. ஜோகோவிச்சின் மகள் தாராவின் பிறந்த நாள் இன்று. மகளின் பிறந்த நாளை முன்னிட்டு வெற்றி பெற்ற கையோடு டென்னிஸ் கோர்ட்டில் நடனமாடினார். இது அங்கிருந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.