டென்னிஸ்
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் காயத்தால் விலகிய நவோமி ஒசாகா
- ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
- ஜப்பானின் நவோமி ஒசாகா காயம் காரணமாக காலிறுதியில் விலகினார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ரொமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டின் உடன் மோத இருந்தார்.
ஆனால் இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் ரொமேனியா வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறினார்.