டென்னிஸ்

மியாமி டென்னிஸ்: காலிறுதியில் ஸ்வியாடெக், பெகுலா: கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

Published On 2025-03-25 10:58 IST   |   Update On 2025-03-25 10:58:00 IST
  • ஸ்வியாடெக், பெகுலா காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
  • 4-வது சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனையிடம் கோகோ காப் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

மியாமி:

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து) எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன்) மோதினார்.இதில் ஸ்வியாடெக் 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மற்றும் மார்டா ஒலேஹிவ்னா கோஸ்ட்யுக் (உக்ரைன்) ஆகியோர் மோதினர். இதில் பெகுலா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை மாக்டா லினெட்டுடன் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் மோதினார். இதில் கோகோ காப் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

Tags:    

Similar News