டென்னிஸ்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 4வது சுற்றில் இத்தாலி வீரர் அதிர்ச்சி தோல்வி
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது;
- நான்காவது சுற்றில் இத்தாலி வீரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 4-வது சுற்றில் முன்னணி வீரரான இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய கனடா வீரர் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரரை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். லாரன்சோ முசெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.