டென்னிஸ்
ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு பெகுலா முன்னேற்றம்
- முதல் செட்டை நோஸ்கோவா 7-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
- நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் பெகுலா, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் மோதவுள்ளார்.
பெர்லின்:
ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மற்றும் செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா மோதினர்.
இதில் முதல் செட்டை நோஸ்கோவா 7-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். அடுத்த இரண்டு செட்டுகளை பெகுலா கைப்பற்றினார். இதன் மூலம் 2-7, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் பெகுலா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் பெகுலா, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் மோதவுள்ளார்.