டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்வியாடெக்- மாண்ட்கோமெரி வெற்றி
- பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரெபேக்கா ஸ்ராம்கோவாவுடன் ஸ்வியாடெக் மோதினார்.
- மற்றொரு ஆட்டத்தில் ராபின் மாண்ட்கோமெரி, டயான் பாரியுடன் மோதினார்.
பாரீஸ்:
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. இதில் இன்று பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்லோவாக் வீராங்கனை ரெபேக்கா ஸ்ராம்கோவாவுடன் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் மோதினார்.
இதில் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ராபின் மாண்ட்கோமெரி பிரெஞ்சு வீராங்கனை டயான் பாரியுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ராபின் மாண்ட்கோமெரி 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினர்.