டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் தொடரில் இருந்து ஜோகோவிச் விலகல்
- பிரெஞ்சு ஓபன், விம்பிள்டனில் அரையிறுதியில் தோல்வியடைந்தார்.
- அடுத்து அமெரிக்க ஓபனில் விளையாட இருக்கிறார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் வருகிற 24ஆம் தேதி தொடங்கும் நிலையில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் விலகியுள்ளார். மெடிக்கல் காரணமாக அவர் விலகவில்லை என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். "ஏடிவி மாஸ்டர்ஸ் 1000" தொடரில் 45-12 சாதனையை ஜோகோவிச் வைத்துள்ளார்.
கடந்த மே மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற தொடரை வென்று 100ஆவது டூர்-லெவல் டைட்டிலை கைப்பற்றினார். அதன்பின் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டனில் அரையிறுதி வரை முன்னேறினார். இரண்டு அரையிறுதி போட்டியிலும் சின்னரிடம் தோல்வியடைந்தார்.
சின்சினாட்டி தொடரில் விளையாடாத நிலையில், அடுத்து அமெரிக்க ஓபனில் விளையாட இருக்கிறார்.