என் மலர்
நீங்கள் தேடியது "சின்சினாட்டி"
- பிரெஞ்சு ஓபன், விம்பிள்டனில் அரையிறுதியில் தோல்வியடைந்தார்.
- அடுத்து அமெரிக்க ஓபனில் விளையாட இருக்கிறார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் வருகிற 24ஆம் தேதி தொடங்கும் நிலையில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் விலகியுள்ளார். மெடிக்கல் காரணமாக அவர் விலகவில்லை என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். "ஏடிவி மாஸ்டர்ஸ் 1000" தொடரில் 45-12 சாதனையை ஜோகோவிச் வைத்துள்ளார்.
கடந்த மே மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற தொடரை வென்று 100ஆவது டூர்-லெவல் டைட்டிலை கைப்பற்றினார். அதன்பின் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டனில் அரையிறுதி வரை முன்னேறினார். இரண்டு அரையிறுதி போட்டியிலும் சின்னரிடம் தோல்வியடைந்தார்.
சின்சினாட்டி தொடரில் விளையாடாத நிலையில், அடுத்து அமெரிக்க ஓபனில் விளையாட இருக்கிறார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் லியானர்டோ மேயரை வீழ்த்திய ரோஜர் பெடரர் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். #Cincinnati #RogerFederer
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற மூன்றாவது சுற்று போட்டியில் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், அர்ஜெண்டினாவின் லியானர்டோ மேயரை எதிர்கொண்டார்.
இதன் முதல் செட்டை பெடரர் வெறும் 15 நிமிடங்களில் 6-1 என எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் இந்த செட்டையும் பெடரர் 7-6(6) என கைப்பற்றினார். இதன்மூலம் 6-1, 7-6(6) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பெடரர் காலிறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்த வெற்றி மூலம் சக நாட்டு வீரரான ஸ்டான் வாவ்ரிங்காவை எதிர்த்து காலிறுதியில் விளையாட உள்ளார் பெடரர்.






