டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ரைபகினா- மேடிசன் கீஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2025-08-12 20:58 IST   |   Update On 2025-08-12 20:58:00 IST
  • முதல் செட்டை எலிஸ் மெர்டென்ஸ் கைப்பற்றிய நிலையில், 2 மற்றும் 3-வது செட்டை ரைபகினா கைப்பற்றினார்.
  • மற்றொரு ஆட்டத்தில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), அயோய் இடோ (ஜப்பான்) ஆகியோர் மோதினர்.

சின்சினாட்டி:

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரைபகினா (கஜகஸ்தான்) - எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்) மோதினர்.

இதில் முதல் செட்டை எலிஸ் மெர்டென்ஸ் கைப்பற்றிய நிலையில், 2 மற்றும் 3-வது செட்டை ரைபகினா கைப்பற்றினார். ரைபகினா இந்த ஆட்டத்தில் 4-6, 6-3 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), அயோய் இடோ (ஜப்பான்) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் மேடிசன் 6-4, 6-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். இவர் 4-வது சுற்றில் மேடிசன் கீஸ் மற்றும் ரைபகினா மோத உள்ளார்.

மற்ற ஆட்டங்களில் ஸ்வியாடெக் விளையாடமலே அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஸ்வியாடெக்குக்கு எதிராக விளையாட கூடிய மார்டா கோஸ்ட்யுக் (உக்ரைன்) காயம் காரணமாக வெளியேறியதால் ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு வீராங்கனையான அன்னா கலின்ஸ்காயா (ரஷ்யா) 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 

Tags:    

Similar News