டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: பெகுலா- இகா ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2025-09-29 17:25 IST   |   Update On 2025-09-29 17:25:00 IST
  • இகா ஸ்விடெக் (போலந்து) மற்றும் மரியா கமிலா ஒசோரியோ (கொலம்பியா) ஆகியோர் மோதினர்.
  • முதல் செட்டை இகா ஸ்வியாடெக் 6-0 என்ற கணக்கில் வென்றார்.

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் இகா ஸ்விடெக் (போலந்து) மற்றும் மரியா கமிலா ஒசோரியோ (கொலம்பியா) ஆகியோர் மோதினர்.

முதல் செட்டை இகா ஸ்வியாடெக் 6-0 என்ற கணக்கில் வென்றார். இதனையடுத்து கமிலாவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதனால் இகா ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மற்றும் எம்மா ரதுகானு (தென்னிசு) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பெகுலா இழந்தார்.

2-வது செட்டை 7-6 (11-9) என்ற கணக்கில் கைப்பற்றிய பெகுலா அடுத்த செட்டை எளிதாக கைப்பற்றினார். இதனால் 3-6, 7-6 (11-9), 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் பொட்டாபோவா (ரஷ்யா), சோனய் கர்தல் (பிரிட்டிஷ்), எம்மா நவரோ (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Tags:    

Similar News