டென்னிஸ்
null
சென்னை ஓபன் டென்னிஸ்: வீராங்கனைகளுக்கு வெற்றிக் கோப்பைகளை வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
- கடந்த 25ஆம் தேதியில் இருந்து இன்றுவரை போட்டிகள் நடைபெற்றன.
- இந்தோனேசிய வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை ஓபன் டென்னிஸ் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தோனேசியாவின் ஜானிஸ் டிஜென்- ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டிஜென் 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த போட்டியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்த்து ரசித்தனர். அதன்பின் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசு கோப்பையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.