டென்னிஸ்
சுவிஸ் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் காஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி
- சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில், இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றுப் போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட், அர்ஜெண்டினாவின் ஜுவான் மேனுவல் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜுவான் 6-2, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நார்வேயின் காஸ்பர் ரூட் தொடரில் இருந்து வெளியேறினார்.