டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்: நம்பர் 2 வீரருக்கு அதிர்ச்சி அளித்த பெல்ஜியம் வீரர்
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 2 வீரரும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரான கார்லோஸ் அல்காரஸ், பெல்ஜியத்தின் டேவிட் காபின் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 5-7 என இழந்த காபின், அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 2 வீரரான அல்காரஸ் தொடரின் முதல் சுற்றில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.