விளையாட்டு

சானியா மிர்சா

கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

Update: 2022-07-02 05:07 GMT
  • சானியா மற்றும் பாவிக் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
  • 35 வயதான சானியா மிர்சா தனது இறுதி விம்பிள்டன் போட்டியில் விளையாடி வருகிறார்.

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா- பாவிக் ஜோடி விளையாடி வருகிறது.

ஆறாம் நிலை வீராங்கனையான சானியா மற்றும் பாவிக் ஜோடி 6-4, 3-6, 6(10)-6(3) என்ற செட் கணக்கில் ஜார்ஜியாவின் நடேலா டிசலமிட்ஸே - ஸ்பெயினின் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

35 வயதான சானியா மிர்சா தனது இறுதி விம்பிள்டன் போட்டியில் விளையாடி வருகிறார்.

Tags:    

Similar News