விளையாட்டு

புரோ கபடி லீக்: சாம்பியன் பட்டம் வென்ற புனே அணி பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

Published On 2024-03-02 08:35 GMT   |   Update On 2024-03-02 08:35 GMT
  • இத்தொடரில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
  • 2-வது இடத்தை பிடித்த அரியானா அணிக்கு ரூ.1.8 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

ஐதராபாத்:

10-வது புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான் சாம்பியன் பட்டம் பெற்றது. நேற்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் 28-25 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்தது.

முதல் முறையாக கோப்பையை வென்ற புனே அணிக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த அரியானா அணிக்கு ரூ.1.8 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

புனே அணி கேப்டன் அஸ்லம் மிக மதிப்புமிக்க வீரராக தேர்வு பெற்றார். அவர் 142 ரைடு புள்ளிகளும், 23 டேக்கிள் புள்ளிகளும் பெற்றார். அவருக்கு ரூ.20 லட்சம் கிடைத்தது.

இந்தத் தொடரில் அதிக ரைடு புள்ளிகளை டெல்லி கேப்டன் அகமாலிக் பெற்றார். அவர் மொத்தம் 228 புள்ளிகளை எடுத்தார். சிறந்த ரைடராக தேர்வு பெற்ற அகமாலிக்குக்கு ரூ.15 லட்சம் பரிசு தொகை கிடைத்தது.

வீரர்களை மடக்கி பிடிப்பதில் சிறந்த வீரராக புனே வீரர் முகமது ரேசா தேர்வு பெற்றார். அவர் 97 புள்ளிகள் பெற்றார். அவருக்கு ரூ.15 லட்சம் கிடைத்தது.

Tags:    

Similar News