விளையாட்டு

அவனி லெகாரா       பிரதமர் மோடி

பாரா உலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி- 2வது தங்கம் வென்றார் அவனி லெகாரா- பிரதமர் பாராட்டு

Published On 2022-06-12 00:12 GMT   |   Update On 2022-06-12 00:12 GMT
  • 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அவனி லெகாரா முதல் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்
  • 2வது முறையாக தங்கம் வென்ற அவனிக்கு, பிரதமர் மோடி பாராட்டு

சாட்டௌரோக்ஸ்:

பிரான்சின் சாட்டௌரோக்ஸ் நகரில் பாரா உலக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 50மீ ரைபிள் பிரிவில், இந்தியாவின் இளம் பாராலிம்பிக் சாம்பியன் அவனி லெகாரா தங்கம் வென்றார்.

இறுதிப் போட்டியில் அவனி 458.3 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.  ஸ்லோவாக்கியாவின் வெரோனிகா வடோவிகோவா (456.6) மற்றும் ஸ்வீடனின் அன்னா நார்மன் (441.9) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கால பதக்கங்களை வென்றனர்.

முன்னதாக செவ்வாயன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அவனி லெகாரா உலக சாதனையுடன் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். நேற்றைய போட்டியில் அவர் 2வது முறையாக தங்கம் வென்றுள்ளதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:

அவனி லெக்ரா மற்றொரு தங்கத்தை வென்றதற்காக பெருமைப்படுகிறேன். புதிய உயரங்களை எட்டுவதற்கான அவரது உறுதிப்பாடு குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த சாதனைக்கு நான் அவளை வாழ்த்துகிறேன், மேலும் அவள் எதிர்காலம் சிறந்ததாக இருக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News