விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஏமாற்றம் அளித்த மனு பாக்கர்

Published On 2025-06-11 19:52 IST   |   Update On 2025-06-11 19:52:00 IST
  • 3-வது உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
  • இதில் இந்தியாவின் மனு பாக்கர் இறுதிச்சுற்றில் 6வது இடம் பிடித்தார்.

முனீச்:

3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் நேற்று தொடங்கி 14-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களில் பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கர், வெண்கலம் கைப்பற்றிய சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே ஆகியோரும் அடங்குவர்.

தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்நிலையில், 25 மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் 5வது இடம்பெற்று டாப் 8 பட்டியலில் இடம்பிடித்தார்.

மாலை 6 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 6வது இடம்பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

Tags:    

Similar News