விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து தோல்வி

Published On 2024-05-26 08:49 GMT   |   Update On 2024-05-26 08:49 GMT
  • மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
  • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

கோலாலம்பூர்:

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் வாங் யீயை எதிர்கொண்டார்.

இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 21-16 என முதல் செட்டை வென்றார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட வாங் யீ அடுத்த இரு சுற்றுகளை 21-5, 21-16 என கைப்பற்றிய சாம்பியன் பட்டம் வென்றார்.

Tags:    

Similar News