விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பிவி சிந்து தோல்வி

Published On 2025-05-21 17:09 IST   |   Update On 2025-05-21 17:09:00 IST
  • ஆண்களுக்கான முதல் சுற்றில் ஸ்ரீகாந்த், பிரனோய், ஷெட்டி, கருணாகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
  • ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியான்ஷு ராஜாவத் தோல்வியடைந்தார்.

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியான்ஷு ராஜாவத் சிங்கபூர் வீரரான ஜேசன் டெஹ் ஜியா ஹெங் உடன் மோதினர். இந்த ஆட்டத்தில் ராஜாவத் 15-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, பிரனோய், ஷெட்டி, கருணாகரன் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இதேபோல் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, வியட்நாமின் நுயான் துய் லின் உடன் மோதினார். முதல் செட்டை வியட்நாம் வீராங்கனையும் 2-வது செட்டை சிந்துவும் வெற்றி பெற்றனர். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டை வியட்நாம் வீராங்கனை வென்றார். இதன்மூலம் 21-11, 14-21, 21-15 என்ற செட் கணக்கில் பிவி சிந்துவை வீழ்த்தி வியட்நாம் வீராங்கனை அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.  

Tags:    

Similar News