விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-09-23 14:28 GMT

"ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா அதிக வீரர்களை அனுப்பி இருக்கிறது. இந்தியா சார்பில் பங்கேற்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய விளையாட்டு போட்டிகளில் களம் காணும் நமது வீரர்கள் சிறப்பாக ஆடி, உண்மையான போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்தட்டும்," என்று பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2023-09-23 13:42 GMT

ஆசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் நாடுகளை குறிப்பிடும் உருவ பொம்மைகள் துவக்க விழாவில் அசத்தல் நடனம்.

2023-09-23 13:26 GMT

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் நாட்டை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவை அறிமுகப்படுத்தும் வகையில், இந்திய தேசியக்கொடியுடன் லோவ்லினா மற்றும் ஹர்மன்பிரீத் சிங் அணிவகுப்பு நடத்தினர்.

2023-09-23 13:22 GMT

ஆசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க விழாவில் சீன பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் நாட்டை அறிமுகப்படுத்தும் வகையில் தேசியக்கொடியுடன் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

2023-09-23 13:17 GMT

19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. தாமரைப்பூ வடிவிலான ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஸ்டேடியத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு துவக்க விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் கலந்துகொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆசிய போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

2023-09-23 05:03 GMT

இதன்மூலம், ஆசிய விளையாட்டு போட்டி 2023ல் ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் தஜிகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வென்றுள்ளது.

2023-09-23 04:57 GMT

தொடர்ந்து 3வது சுற்றிலும் 11-5 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

2023-09-23 04:56 GMT

ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் முதல் நிலை போட்டி- 3வது சுற்றில், 1வது செட்டில் 11-1 என்ற கணக்கிலும், 2வது செட்டில் 11-3 என்ற கணக்கிலும் இந்தியா முன்னிலையில் உள்ளது.

2023-09-23 04:45 GMT

ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் முதல்நிலை சுற்றின் 3வது போட்டியில், தஜிகிஸ்தான் வீரர் இப்ரோகிம் இஸ்மாயில்சோடா- இந்திய வீரர் ஹர்மீட் ராஜூல் தேசாய் மோதியுள்ளன.

2023-09-23 04:43 GMT

தொடர்ந்து, 3வது சுற்றிலும் 11-5 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

Tags:    

Similar News