ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் முதல்நிலை சுற்றின் 2வது போட்டியில் 2வது செட்டில் 11-7 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
முதலாவது செட்டில் 13-11 என்ற கணக்கில் தஜிகிஸ்தான் வீரரை வீழ்த்தினார் இந்திய வீரர் விகாஸ் தக்கர்.
ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் முதல் நிலை போட்டியின் 2வது சுற்றில் தஜிகிஸ்தான் வீரர் உபய்துல்லோ சுல்தோனோவ்- இந்திய வீரர் மணுஷ் உட்பல்பாய் ஷா மோதியுள்ளனர்.
3வது செட்டிலும் 11-8 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் முதல் நிலை போட்டியில், தஜிகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2- 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
தொடர்ந்து, 2வது செட்டிலும் 11-5 என்ற கணக்கில் தஜிகிஸ்தான் வீரரை வீழத்தினார் இந்திய வீரர் மாணவ் விகாஷ்.
ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் நிலை ஆட்டத்தில் முதல் செட்டில் 11-8 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை.
முதல் சுற்றில், தஜிகிஸ்தான் வீரர் அப்சல்கான் மமுதோவிற்கு எதிராக இந்திய வீரர் மாணவ் விகாஷ் தக்கர் விளையாடி வருகிறார்.
ஐந்து சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்திய அணி சார்பில், மாணவ் விகாஷ் தக்கர், மணுஷ் உட்பல்பாய் ஷா, ஹர்மீட் ராஜூல் தேசாய் ஆகிய வீரர்கள் விளையாடுகின்றனர்.
ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் நிலை ஆட்டம் தொடங்கியது.