ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
டென்னிசில் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கர்மன் கவுர் தண்டி, ருதுராஜ் போஸ்லே ஜோடி, கஜகஸ்தான் ஜோடியை 6-4, 6-2 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை பெண்கள் அணி 3வது விக்கெட்டை இழந்துள்ளது.
இந்தியாவின் டிடாஸ் சாது ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இலங்கை அணி 3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை பெண்கள் அணி முதல் விக்கெட்டை இழந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.
இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணி கேப்டன் மன்பிரித் சிங் 4வது விக்கெட்டாக 2 ரன்னில் அவுட்டானார். இந்தியா 18 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணியின் ரிச்சா கோஷ் 3வது விக்கெட்டாக 9 ரன்னில் அவுட்டானார். இந்தியா 17 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணியின் ஸ்மிருதி மந்தனா 2வது விக்கெட்டாக 46 ரன்னில் அவுட்டானார்.
டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி ஜோடி 2வது சுற்றில் 6-2, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
துப்பாக்கிச் சுடுதலில் ஆண்கள் தனிநபர் பிரிவில் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் சுற்றில் இந்தியாவின் விஜய் வீர் சித்து 4வது இடம்பிடித்து வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார்.