விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-09-26 01:45 GMT

ஆண்கள் ஹாக்கி - சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் முதல் பாதி முடிவில் இந்திய அணி 6-0 என முன்னிலை வகிக்கிறது. மந்திப் சிங் 2 கோல் அடித்து அசத்தினார்.

2023-09-26 01:35 GMT

ஆண்கள் ஹாக்கி பிரிவில் சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 2 கோல்களை அடித்து அசத்தியது.

2023-09-26 01:33 GMT

துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ரமிதா, பன்வார் ஆகியோர் கொண்ட கலப்பு அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

2023-09-26 01:33 GMT

ஆண்கள் ஹாக்கி பிரிவில் சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 3வது கோலை அடித்துள்ளது.

2023-09-26 01:28 GMT

ஆண்கள் ஹாக்கி பிரிவில் சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2வது கோலை அடித்துள்ளது.

2023-09-26 01:16 GMT

ஹாக்கி ஆண்கள் பிரிவில் இந்தியா, சிங்கப்பூர் அணிகள் மோதி வருகின்றன. இதில் இந்தியா சார்பில் மந்திப் சிங் முதல் கோலை அடித்தார்.

2023-09-25 12:03 GMT

நீச்சல் போட்டி ஆண்கள் 50 மீட்டர் பேக்ஸ்டோக் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் 6-வது இடம் பிடித்தார்.

2023-09-25 09:27 GMT

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்: இறுதி போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் உறுதியாகி இருக்கிறது.

2023-09-25 09:12 GMT

ஆசிய விளையாட்டு போட்டி: மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

2023-09-25 08:26 GMT

இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை பெண்கள் அணி 4வது விக்கெட்டை இழந்துள்ளது. இலங்கை பெண்கள் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 50 ரன்களை எடுத்துள்ளது.

Tags:    

Similar News