விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-09-29 06:49 GMT

டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா - ருதுஜா போசலே ஜோடி இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

2023-09-29 06:06 GMT

டேபிள் டென்னிஸ்: மற்றொரு ஆட்டத்தில் இந்திய ஜோடியான சத்தியன்-சரத் 0-3 என்று தோல்வியடைந்து காலிறுதி வாய்ப்பை இழந்தது.

2023-09-29 06:02 GMT

டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தைபே ஜோடிக்கு எதிரான முதல் செட்டை 1-0 என ரோகன் போபண்ணா-ருதுஜா போசலே கைப்பற்றினர்.

2023-09-29 06:00 GMT

டேபிள் டென்னிஸ்: மானவ் தாக்கர் மனுஷ் ஷா ஜோடி சிங்கப்பூர் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

2023-09-29 05:31 GMT

டேபிள் டென்னிஸ்: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை மனிகா பத்ரா பெற்றார்.

2023-09-29 05:15 GMT

ஸ்குவாஷ் பெண்கள் அணி அரையிறுதி சுற்றில் இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதின. இப்போட்டியில் 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஹாங்காங் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் தோல்வியடைந்த போதும் இந்திய அணிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.

2023-09-29 04:26 GMT

நீச்சல்: சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்ஃபிளை போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

2023-09-29 04:22 GMT

டேபிள் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா காலிறுதி போட்டிக்கு முன்னேறினார். தாய்லாந்தின் சுதாசினி சவெட்டாபுட்டை எதிர்த்து 4-2 என்ற கேம் கணக்கில் மானிகா முன்னேறியுள்ளார்.

2023-09-29 04:15 GMT

ஆசிய விளையாட்டு போட்டியில் 7-வது நாளான இன்று காலை 9.40 மணியளவில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி என 5 பதக்கங்களை பெற்றுள்ளது.

2023-09-29 03:56 GMT

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 242.1 புள்ளிகள் பெற்று இந்திய வீராங்கனை பலாக் தங்கம் வென்றார். இஷா சிங் 239.7 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். பாகிஸ்தான் வீராங்கனை 218.2 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

Tags:    

Similar News