ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உறுதி.
பேட்மிண்டன்: மகளிர் அணியின் காலிறுதிபோட்டியில் இந்தியா வெளியேறியது. தாய்லாந்திடம் 0-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன் - சாகித் மைமேனி ஜோடி 2-0 என தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
நீச்சல் பெண்கள் 50 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவின் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை நினா வெங்கடேஷ் 14ம் இடம் பிடித்தார். இதன் மூலம் இறுதி போட்டிக்கு நுழையும் வாய்ப்பை நினா இழந்தார்.
துப்பாக்கி சுடுதல் போட்டி 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் ஆண்கள் அணியில் பிரதாப் சிங் தோமர், சுரேஷ் குசாலே, அகில் சோரன் ஆகியோர் தங்கம் வென்றனர்.
துப்பாக்கி சுடுல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் அணியில் இந்திய வீராங்கனைகள் இஷா சிங், பலாக், திவ்யா சுப்பராஜு ஆகியோர் 1731-50X புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றனர். சீனா 1736-66X புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. சீன தைபே 1723-53X புள்ளிகள் பெற்று வெண்கலம் பதக்கம் வென்றது.
இந்திய வீராங்கனைகள் இஷா சிங் மற்றும் பலாக் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.
பேட்மிண்டன்: மகளிர் அணியின் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஏமாற்றம்.
டென்னிஸ் இந்தியா ஆண்கள் அணியில் ராம்குமார் ராமநாதன் - சாகித் மைமேனி ஜோடி தங்கம் வெல்லுமா? இறுதி போட்டியில் விளையாடி வருகிறார்கள்.
பேட்மிண்டன்: மகளிர் அணியின் காலிறுதி போட்டியில் இந்தியா தாய்லாந்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. 2கேம் முடிவில் இருவரும் 1-1 என சமநிலையில் 3-வது கேமில் விளையாடி வருகிறார்கள்.
20 மீட்டர் ரேஸ்வாக் இறுதி சுற்றில் இந்திய வீரர்கள் விகாஷ் சிங் 5ம் இடத்தையும், சந்தீப் குமார் 10வது இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியில் சீன வீரர்கள் தங்கம், வெள்ளிப்பதக்கத்தை வென்றனர். வெண்கல பதக்கத்தை ஜப்பான் வீரர் வென்றார்.