ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
20 மீட்டர் ரேஸ்வாக்கில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஏமாற்றம்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று காலை முதல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ரேஸ்வாக் போட்டி நடைபெற்றது.
இந்தியாவுக்கு மேலும் நான்கு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று பதக்கங்களை வென்றது. ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் இதில் அடங்கும்.
ஆசிய விளையாட்டு பதக்க பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடம்.
இந்தியா இதுவரை 6 தங்கம், 8 வெள்ளி மற்றும் 11 வெண்கல பதக்கங்களை வென்று இருக்கிறது.
ஆண்கள் ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானை 4-2 கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இந்தியா சார்பில் அபிஷேக் 2 கோல்களையும், அமித் ரோஹிதாஸ் மற்றும் மந்தீப் தலா ஒரு கோல் அடித்தனர்.
கால்பந்து போட்டியில் இந்தியாவுக்கு ஏமாற்றம். சவுதி அரேபியா 2 கோல்களுடன் வெற்றி.
ஆண்கள் ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பான் உடன் இந்திய அணி, முதல் பாதி வரை 2 கோல் அடித்து முன்னிலை.
இந்தியாவுக்கு எதிரான கால்பந்து போட்டியில் சவுதி அரேபியா அணி 2 கோல்களை அடித்து, முன்னிலையில் உள்ளது.
டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போப்பண்ணா மற்றும் ருதுஜா போசேல் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம். இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி இருக்கிறது.