ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
ஸ்குவாஷ்: கலப்பு இரட்டையர் பிரிவில் ஹரிந்தர் பால்சிங்- தீபிகா பள்ளிக்கல் ஜோடி தென்கொரியா ஜோடியை 2-0 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வில்வித்தை: ஆண்கள் ரிகர்வ் தகுதி சுற்றின் முடிவில் அட்டானு தாஸ் 4-வது இடத்தையும், திராஜ் 7-வது இடத்தையும், பிரபாகர் 15-வது இடத்தையும், சவுகான் 17-வது இடத்தையும் பிடித்தனர்.
வில்வித்தை: பெண்கள் காம்பவுண்ட் தகுதி சுற்றின் முடிவில் சுரேகா ஜோதி வெண்ணாம் முதலிடமும், அதிதி கோபிசந்த் 4, பர்னீத் கவுர் 12, அவ்னீத் கவுர் 15 இடத்தையும் பிடித்துள்ளனர். எலிமினேஷன் சுற்று நாளை முதல் தொடங்குகிறது
துப்பாக்கி சுடுதல் ஆண்கள் டிராப் குழு ஸ்டேஜ் 2 தகுதிச்சுற்று போட்டியில் டெரியஸ், சொரவர் சிங், பிரித்வி ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2-ம் இடத்தில் உள்ளது. இதனால் ஆண்கள் டிராப் குழு சுற்றில் தங்கப்பதக்கத்திற்கான போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
கேனோஸ்பிரிண்ட்:
கேனோஸ்பிரிண்ட் பெண்கள் கயக் ஒற்றையர் 500 மீட்டர் அரையிறுதியில் இந்திய வீராங்கனை சோனியா தேவி 2-வது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
தடகளம் ஆண்களுக்கான 200 மீட்டரில் இந்திய வீரர் அம்லன் 3-வது இடத்தைப் பிடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
பெண்களுக்கான ஹெப்டத்லான் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை நந்தினி ஆகாஷாரா 5.95 மீட்டர் தூரம் தாண்டி 3-வது இடம் பிடித்தார்.
தடகளம் பெண்களுக்கான 200மீட்டர் (Round 1) ஜோதி யர்ராஜி ஹிட் 1-ல் 3-ம் இடத்தை பிடித்தார். முதல் 2 இடங்களை பிடித்த சீனா மற்றும் கஜகஜஸ்தான் வீராங்கனைகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
துப்பாக்கி சுடுதல் ட்ராப் 50 ஒற்றையர் மற்றும் அணி பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டி தொடரின் 9ம் நாளான இன்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.