விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-09-30 15:45 GMT

நான்காவது இடத்தில் இந்தியா:

பதக்க பட்டியலில் தொடர்ந்து நான்காவது இடத்தில் இந்தியா. இதில் 10 தங்கம், 14 வெள்ளி மற்றும் 14 வெண்கல பதக்கங்கள் அடங்கும். இதுவரை இந்தியா மொத்தத்தில் 38 பதக்கங்களை வென்று இருக்கிறது. 

2023-09-30 14:34 GMT

ஹாக்கி:

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பாகிஸ்தானை 10-2 என்ற அடிப்படையில் பந்தாடியது. இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 4 கோல்களை அடித்து அசத்தினார்.

2023-09-30 14:22 GMT

ஆண்கள் பேட்மிண்டன்:

ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக இந்திய ஆண்கள் பேட்மிண்டன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல். அரையிறுதி போட்டியில், இந்திய அணி தென் கொரியாவை 3-2 என்ற அடிப்படையில் வீழ்த்தியது.

2023-09-30 13:27 GMT

ஆண்கள் ஹாக்கி:

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில் இந்திய அணி 4-0 என்ற அடிப்படையில் முன்னணியில் உள்ளது.

2023-09-30 13:18 GMT

10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது இந்தியா.

2023-09-30 12:10 GMT

டேபிள் டென்னிஸ்:

ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக டேபிள் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.

2023-09-30 11:53 GMT

டேபிள் டென்னிஸ்:

பெண்கள் இரட்டையர் காலிறுதி போட்டியில் இந்தியா வெற்றி 

2023-09-30 11:36 GMT

டேபிள் டென்னிஸ்: 

பெண்கள் இரட்டையர் காலிறுதி போட்டி முதல் இரண்டு செட்களை கைப்பற்றி இந்தியா அசத்தல்.

2023-09-30 11:19 GMT

பேட்மிண்டன் இந்திய ஆண்கள் அணி 13-21 புள்ளிகளை பெற்று முதல் சுற்றில் போராடி தோல்வி.

2023-09-30 10:39 GMT

பேட்மிண்டன்:

தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய ஆண்கள் அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது.

Tags:    

Similar News