விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-10-02 02:24 GMT

தடகளம்:

800 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள் முகமது அப்சல் மற்றும் கிரிஷன் குமார் இருவரும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். முகமது அஃப்சல் 1:46.79 ஹீட் நேரத்தில் கடந்து முதலிடமும் கிரிஷன் குமார் தனது ஹீட்டில் 1:49.45 நேரத்தில் 2வது இடத்தையும் பிடித்தார்.



2023-10-02 02:16 GMT

ரோலர் ஸ்கேட்டிங்:

ரோலர் ஸ்கேட்டிங் ஆண்களுக்கான 3000 மீட்டர் ரிலே பந்தயத்தில் ஆர்யன்பால், ஆனந்த், சித்தாந்த் மற்றும் விக்ரம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.

2023-10-02 02:04 GMT

ரோலர் ஸ்கேட்டிங்:

ரோலர் ஸ்கேட்டிங் பெண்கள் ஸ்பீடு ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலே ரேஸ் போட்டியில் இந்திய வீராங்கனைகளான ஆரத்தி கஸ்தூரி ராஜ், ஹீரல், சஞ்சனா மற்றும் கார்த்திகா ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

2023-10-02 02:00 GMT

வில்வித்தை:

வில்வித்தை ரிகர்வ் கலப்பு குழு 1/8 எலிமினேட்டர் சுற்று போட்டி 3ல் இந்தியா- மலேசியா மோதின. இப்போட்டியில் மலேசியாவை 6-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அங்கிதா, அதனுதாஸ் இடம்பெற்றிருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

2023-10-02 01:59 GMT

ஆசிய விளையாட்டு தொடரின் 10வது நாளான இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. 13 தங்கம், 21 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-10-01 15:36 GMT

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு இன்று மொத்தம் 15 பதக்கங்கள். இதில் 3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் அடங்கும். 

2023-10-01 14:17 GMT

பேட்மிண்டன்:

ஆண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி வெள்ளி வென்றிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

2023-10-01 13:52 GMT

தடை ஓட்டம்:

100 மீட்டர் தடை ஓட்டம் போட்டியில் சீன வீராங்கனை தகுதிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் ஜோதி யாராஜிக்கு வெள்ளி பதக்கம்.

2023-10-01 13:23 GMT

வட்டு எறிதல்:

பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமா புனியா வெண்கல பதக்கம் வென்று அசத்தல். 

2023-10-01 12:57 GMT

நீளம் தாண்டுதல்:

நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர்.

Tags:    

Similar News