விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-10-01 12:50 GMT

ஆண்கள் ஓட்டப்பந்தயம்:

ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அஜய் குமார் சரோஜ் வெள்ளி பதக்கமும், ஜின்சன் ஜான்சன் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.

2023-10-01 12:43 GMT

ஓட்டப்பந்தயம்:

1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.

2023-10-01 12:03 GMT

குண்டு எறிதலில் திஜேந்தர்பால் சிங் தங்கம் வென்று அசத்தல்

2023-10-01 11:46 GMT

தடை தாண்டும் ஓட்டம்:

ஆண்களுக்கான 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்று அசத்தல்.

2023-10-01 10:58 GMT

பேட்மிண்டன்:

சீனாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென் அபாரம். 22-20, 14-21, 21-18 என்ற புள்ளிகளில் சீனாவின் ஷி யுகியை வீழ்த்தி அசத்தினார். 

2023-10-01 08:47 GMT

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியா துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மட்டும் 7 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை பெற்றுள்ளது.

2023-10-01 08:41 GMT

துப்பாக்கி சுடுதல் ட்ராப் ஆண்கள் இறுதி போட்டியில் கைனன் டாரியஸ் சனாய் வெண்கலப் பதக்கம் வென்றார். சோரவர் சிங் சந்து 5-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.

2023-10-01 08:38 GMT

ஸ்குவாஷ்: கலப்பு இரட்டையர் பிரிவு ஏ போட்டி 73-ல் இந்தியா- பாகிஸ்தான் மோதின. இப்போட்டியில் பாகிஸ்தானை 2-0 என்ற செட்களில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் தீபகா- ஹரிந்தர் பால்சிங் இடம்பெற்றிருந்தனர்.

2023-10-01 08:26 GMT

கேனோ ஸ்பிரிண்ட்: கேனோ ஸ்பிரிண்ட் பெண்கள் 200 மீட்டர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதியில் இந்திய வீராங்கனை மேகா ப்ரதீப் 4-வது இடத்தை பிடித்து இறுதி போட்டி வாய்ப்பை இழந்தார்.

2023-10-01 08:19 GMT

ஆக்கி: தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 0-1 என பின்தங்கிய நிலையில் உள்ளது.

Tags:    

Similar News