கடைசி ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா அணி பேட்டிங்... இந்திய அணியில் மாற்றம்
- ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 18-வது முறையாக இந்திய அணி டாஸை தோற்றுள்ளது.
- இப்போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
பலமுறை மழை குறுக்கிட்டதால் பெர்த் ஒரு நாள் போட்டி 26 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டது. இதில் இந்தியா 136 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அந்த இலக்கை ஆஸ்திரேலியா 21.1 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. அடிலெய்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்திய அணி ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரது அரைசதத்தால் 264 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோரை ஆஸ்திரேலியா 46.2 ஓவர்களில் போராடி அடைந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேத்யூ ஷார்ட்டுக்கு (74 ரன்) இந்திய பீல்டர்கள் இரண்டு முறை எளிதான கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டது பின்னடைவாக அமைந்தது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 18-வது முறையாக இந்திய அணி டாஸை தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங், நிதிஷ் ரெட்டிக்கு மாற்றாக குல்தீப், பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.