விளையாட்டு

பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா? இன்று மீண்டும் மோதல்

Published On 2025-04-26 08:14 IST   |   Update On 2025-04-26 08:14:00 IST
  • நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
  • கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது.

நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 8 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 3 வெற்றி (ராஜஸ்தான், ஐதராபாத், சென்னை அணிகளுக்கு எதிராக), 5 தோல்வி (பெங்களூரு, மும்பை, லக்னோ, பஞ்சாப், குஜராத் அணிகளிடம்) கண்டு புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் பஞ்சாப், குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்த அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் ஆர்வத்துடன் உள்ளது.

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி (குஜராத், லக்னோ, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு அணிக்கு எதிராக), 3 தோல்வியுடன் (ராஜஸ்தான், ஐதராபாத், பெங்களூரு அணிகளிடம்) 5-வது இடத்தில் இருக்கிறது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

Similar News