விளையாட்டு

ஆசிய தடகள போட்டி: 4*100மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி

Published On 2025-05-31 19:45 IST   |   Update On 2025-05-31 19:45:00 IST
  • 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது.
  • இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 5-வது நாளான இன்று நடைபெற்ற மகளிருக்கான 4*100மீ தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியது. வெற்றி பெற்ற இந்திய அணியில் தமிழக வீராங்கனை அபிநயா இடம்பெற்றுள்ளார்.

Tags:    

Similar News