விளையாட்டு

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் - தங்கம் வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

Published On 2023-07-01 23:58 GMT   |   Update On 2023-07-01 23:58 GMT
  • ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின.
  • இந்திய அணி தங்கம் வென்று 8-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

புதுடெல்லி:

தென் கொரியாவின் பூசன் நகரில் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஈரான் மற்றும் முன்னாள் சாம்பியன் ஆன இந்திய அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 42-32 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது.

இந்தத் தொடரில் இந்திய அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்திய அணி ஆசிய கபடி சாம்பியன்ஷிப் கோப்பையை 8-வது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது.

இந்நிலையில், ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணி இன்று டெல்லி திரும்பியது. ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் இந்திய அணி வீரர்களுக்கு மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

Tags:    

Similar News