கால்பந்து

மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரரா? - ரொனால்டோ கூறியது இதுதான்!

Published On 2025-11-05 11:45 IST   |   Update On 2025-11-05 11:45:00 IST
  • ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம்.
  • விளையாட்டைத் தாண்டி இருவரும் கால்பந்து உலகின் ஐகானாக விளங்குகின்றனர்.

கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி. இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். விளையாட்டைத் தாண்டி இவ்விருவர் உலக ஐகானாக விளங்குகின்றனர்.

மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரர் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் பேசிய ரொனால்டோ, "உலக கோப்பை வெல்வது என் கனவு கிடையாது. வரலாற்றில் சிறந்த வீரரை வரையறுக்க உலக கோப்பை வேண்டுமா? ஒரு தொடரின் 6 அல்லது 7 போட்டிகளில் மட்டும் வென்றால் அவர் சிறந்த வீரர் என்பது நியாயம் என்று நினைக்கிறீர்களா? மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரரா? அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News