கிரிக்கெட் (Cricket)
null

முதல் டெஸ்ட்: வங்கதேசத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜிம்பாப்வே

Published On 2025-04-23 18:28 IST   |   Update On 2025-04-23 18:28:00 IST
  • ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.
  • இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

சில்ஹெட்:

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் 20-ந் தேதி தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 56 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே தரப்பில் வெல்லிங்டன் மசகட்சா மற்றும் முசரபானி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 82 ரன்கள் முன்னிலை பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 59 ரன்களும், பிரையன் பென்னெட் 57 ரன்களும் அடித்தனர். வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 82 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் சாண்டோ 60 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் ஜிம்பாப்வே அணி 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 54 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

Tags:    

Similar News