ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்- 7 அறிமுக வீரர்களுடன் ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
- கிரேய்க் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டது.
- ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் அணிகள் 3 வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.
முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரேய்க் எர்வின் தலைமையிலான இந்த டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரர்கள் சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ், பிளெஸ்ஸிங் முசரபானி, ரிச்சர்ட் ந்ங்கரவா, பிரையன் பென்னட் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். இந்த டெஸ்ட் அணியில் 7 அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே டெஸ்ட் அணி: கிரேக் எர்வின் (கே), பென் கரன், பிரையன் பென்னட், ஜானாதன் காம்ப்பெல், டகுட்ஸ்வா சதைரா, ஜெய்லார்ட் கும்பி, ட்ரெவர் குவாண்டு, டகுட்ஸ்வானாஷே கைடானோ, தடிவானாஷே மருமணி, பிராண்டன் மவுடா, நியாஷா மாயாவோ, பிளஸ்ஸிங் முசரபானி, டியான் மேயர்ஸ், ரிச்சர்ட் ந்ங்கராவா, நியூமன் நியாம்ஹுரி, சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ்.
இந்த டெஸ்ட் தொடருக்கன ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.