கிரிக்கெட் (Cricket)

மகளிர் பிரீமியர் லீக் 2026: டெல்லியில் நாளை மெகா ஏலம்

Published On 2025-11-26 12:00 IST   |   Update On 2025-11-26 12:00:00 IST
  • வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலியாவின் மெக்லேனிங் டெல்லி அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
  • தீப்தி சர்மாவை ஏலத்தில் எடுப்பதற்கு போட்டி நிலவும்.

புதுடெல்லி:

மகளிர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் டபிள்யூ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் 2 முறையும் (2023, 2025), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு தடவையும் (2024) சாம்பியன் பட்டம் பெற்றன.

4-வது மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான மெகா ஏலம் டெல்லியில் நாளை நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது.

இந்த ஏலத்துக்கான பட்டியலில் 194 இந்திய வீராங்கனைகள், 83 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 277 பேர் இடம் பெற்றுள்ளனர். 5 அணிகளில் விளையாடுவதற்காக 50 இந்திய வீராங்கனைகள், 23 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த தீப்தி சர்மாவை ஏலத்தில் எடுப்பதற்கு போட்டி நிலவும்.

வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலியாவின் மெக்லேனிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்ட், இங்கிலாந்தின் சோபி எக்லஸ் டோன், நியூசிலாந்தின் சோபி டிவைன், அமீலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல் வார்ட் ஆகியோரை ஏலம் எடுக்கவும் அணிகள் இடையே போட்டி ஏற்படும்.

Tags:    

Similar News