ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் விளாசிய ஸ்மிரிதி மந்தனா..!
- 45 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
- 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.
இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2ஆவது போட்டி இன்று நியூ சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆனால் ஸ்மிரி மந்தனா சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். 45 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்த நிலையில், 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வயிடைந்தது. 3ஆவது மற்றும் கடைசி போட்டி 20ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது.