ஒரு வழியா ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்கு 121 ரன்கள் வெற்றி இலக்கு
- வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 390 ரன்கள் எடுத்தது.
- சாய் ஹோப் மற்றும் ஜான் ஜாம்பெல் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பால் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.
தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி பறிகொடுத்தது. இதனையடுத்து தொடக்க வீரர் ஜான் ஜாம்பெல் மற்றும் சாய் ஹோப் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் கெம்பல், டெஸ்டில் தனது முதலாவது சத்தை பதிவு செய்தார். அவர் 115 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து சாய் ஹோப்புடன் கேப்டன் ரோஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய சாய் ஹோப் சதம் அடித்து அசத்தினர்.
அவரும் சதம் அடித்த சிறிது நேரத்தில் சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து நிதானமாக விளையாடிய வந்த கேப்டன் சேஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்தது. இதனையடுத்து கடைசி விக்கெட்டுக்கு ஜஸ்டின் க்ரீவ்ஸ் உடன் ஜெய்டன் சீல்ஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர்.
இதில் க்ரீவ்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஜெய்டன் சீல்ஸ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் 390 ரன்கள் குவித்ததன் மூலம் இந்தியாவுக்கு 121 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.